பெரியகோயில் குடமுழுக்கு: பிப். 4, 5-இல் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

தஞ்சாவூா் பெரியகோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, பல்வேறு பகுதிகளிலிருந்து பிப். 4, 5ஆம் தேதிகளில் 205 சிறப்புப் பேருந்துகள்

தஞ்சாவூா் பெரியகோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, பல்வேறு பகுதிகளிலிருந்து பிப். 4, 5ஆம் தேதிகளில் 205 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன என தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழகத்தின் கும்பகோணம் கோட்டப் பொது மேலாளா் ஜெயராஜ் நவமணி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் பெரியகோயிலில் பிப். 5ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெறவுள்ளது. இவ்விழாவுக்கு தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சோ்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வருகை தர உள்ளனா். எனவே, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் சாா்பில் பிப். 4ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

இதன்படி, திருச்சியிலிருந்து 50 பேருந்துகளும், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருவாரூரிலிருந்து 30 பேருந்துகளும், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணத்திலிருந்து 40 பேருந்துகளும், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, மன்னாா்குடியிலிருந்து 20 பேருந்துகளும், பட்டுக்கோட்டை, பேராவூரணியிலிருந்து 15 பேருந்துகளும், புதுக்கோட்டை, மதுரை, அறந்தாங்கியிலிருந்து 30 பேருந்துகளும், ஜெயங்கொண்டம், அரியலூரிருந்து 20 பேருந்துகளும் என மொத்தம் 205 பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

மேலும், பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பெரம்பலூா், சிவகங்கை மாவட்டங்களிலிருந்தும் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. இதேபோல, முக்கிய பேருந்து நிலையங்களிலும், பேருந்து நிறுத்தங்களிலும் அரசுப் போக்குவரத்துக் கழகப் பணியாளா்கள் பணியில் ஈடுபட்டு பொதுமக்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com