குடிமராமத்து பணியில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் பணியாளர்களை பயன்படுத்த நடவடிக்கை 

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே புதூர் ஏரியில் நடைபெற்றுவரும் குடிமராமத்து பணி நடைபெற்று வருகிறது.
குடிமராமத்து பணியில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் பணியாளர்களை பயன்படுத்த நடவடிக்கை 

தஞ்சாவூர் மாவட்டத்தில் குடிமராமத்து பணி யில் 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ்  ஒரு லட்சம் பணியாளர்களை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை ஒரத்தநாடு அருகே புதூர் ஏரியில் நடைபெற்றுவரும் குடிமராமத்து பணியை ஆய்வு செய்த வேளாண் துறை செயலாளர்  ககன்தீப் சிங் பேடி தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் புதூர் ஏரியில்   நடைபெற்று வரும் தூர்வாரும்  பணிகள் குறித்து செவ்வாய்க்கிழமை   வேளாண் துறை செயலாளர் ககன்தீப் சிங் பேடி ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறுகையில், தஞ்சை மாவட்டத்தில் 964 கிலோ மீட்டரில் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியில் இதுவரை 640 கிலோ மீட்டர் நிறைவு பெற்றுள்ளது .பத்து நாள்களுக்கு முன் தஞ்சை மாவட்டத்தில்  120 முதல் 130 இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன .பணிகளை விரைந்து முடிப்பதற்காக தற்போது 260 இயந்திரங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன .ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்தவுடன் கடைமடை பகுதிக்கு தண்ணீர் செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு டெல்டா பகுதியில் தூர்வாரும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. நிகழாண்டில் குறுவை தொகுப்பு திட்டத்திற்கு 3.4 லட்சம் ஏக்கர் எதிர்பார்க்கப்படுகிறது விவசாயிகளும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தமிழக அரசு குறுவை சாகுபடிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, விதை கிராமத் திட்டத்தின் கீழ் விதைகள் மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. மானிய விலையில் நுண்ணூட்டச்சத்து உரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. வேளாண் பொறியியல் துறை சார்பாக மானிய விலையில் விவசாய பணிகளுக்கு தேவையான இயந்திரங்கள் மானிய விலையிலும் வாடகைக்கும் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளின் நலனுக்காக வேளாண்மைப் பணிகளில் இயந்திர தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க பிற மாவட்டங்களிலிருந்தும் வேளாண்மை பணிகளுக்கு இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு உள்ளன.

தஞ்சை மாவட்டத்தில் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 71 ஆயிரம் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர் .தற்போது மாவட்ட ஆட்சியர் ,ஊராட்சி ஒன்றிய ஆணையர் ஆகியோரிடம் ஆலோசனை செய்து  ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் பணியாளர்களை  தூர்வாரும் பணியில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் அனைத்து விவசாய தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் .மேலும் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல கூடிய சிறிய வாய்க்கால்கள் அனைத்து தூர்வாரப்படும் .கிராமங்களில் உள்ள குளங்கள் அனைத்தும் தூர்வாரப்படும் இது மழைக்காலங்களில் நீரை சேமித்து வைத்து பாசனத்திற்கு பயன்படும் .மேலும் தூர்வாரும் பணிகள் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் முறையான வடிகால் வசதி செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் தற்போது 151 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன .மேலும் தேவை இருப்பின் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை மாவட்ட ஆட்சியர் உருவாக்கிக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார்.

இந்த ஆய்வின்போது பயிற்சி ஆட்சியர் அமித் , ஊரக வளர்ச்சித்துறை திட்ட இயக்குனர் பழனி, பொதுப்பணித்துறை மேற்பார்வை பொறியாளர் அன்பரசன், வேளாண்மைத் துறை இணை இயக்குனர் ஜஸ்டின் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் , ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் உள்பட பலர் ஆய்வின்போது உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com