திருவையாறு காவிரி ஆற்றில் தூய்மைப் பணி

திருவையாறு காவிரி ஆற்றில் தண்ணீர் வரவுள்ளதையொட்டி, குப்பைகளை அகற்றும் விதமாக தூய்மைப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து
திருவையாறு காவிரி ஆற்றில் தூய்மைப் பணி

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு காவிரி ஆற்றில் தண்ணீர் வரவுள்ளதையொட்டி, குப்பைகளை அகற்றும் விதமாக தூய்மைப் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மேட்டூர் அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து கல்லணையிலிருந்து பாசனத்துக்காகத் செவ்வாய்க்கிழமை தண்ணீர் திறந்துவிடப்படவுள்ளது.

இதை முன்னிட்டு திருவையாறு  காவிரி ஆற்றில் திருவையாறு பேருராட்சி நிர்வாகத்துடன் இணைந்து திருவையாறு பாரதி இயக்கத்தின் பொங்கி வா காவேரி அமைப்பினர் ஞாயிற்றுக்கிழமை தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.  திருவையாறு ஓடத்துறை படித்துறை, புஷ்ய மண்டபப் படித்துறை, கல்யாண மகால் படித்துறை, திருமஞ்சன வீதி படித்துறை ஆகிய பகுதிகளில் டன் கணக்கில் குவிந்த ஏராளமான குப்பைகள் அகற்றப்பட்டன. 

அப்போது காவிரி ஆற்றின் தூய்மையைக் காக்க உறுதிமொழி ஏற்கப்பட்டது. அப்பகுதி மக்களிடம் காவேரி தூய்மையைக் காப்பதன் அவசியம் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது. இப்பணியில் திருவையாறு ரோட்டரி சமுதாயக் குழுமம், தஞ்சாவூர் நியூடவுன் ரோட்டரி சங்கம், தஞ்சாவூர் பர்சனாலிடி பிளஸ் ஜேசிஐ சங்கம், திருவையாறு  காந்தி பாரதி இளைஞர் மன்றம், வைத்தியநாதன்பேட்டை ஜீவா பாரதி இளைஞர் மன்றம், தெருவாசிகள் நலசங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com