கராத்தே போட்டியில்அரசுப் பள்ளி வெற்றி
By DIN | Published On : 01st March 2020 06:25 AM | Last Updated : 01st March 2020 06:25 AM | அ+அ அ- |

கும்பகோணம்: கும்பகோணத்தை அடுத்த சுவாமிமலையில் அண்மையில் நடந்த தென் இந்தியா அளவிலான கராத்தே போட்டியில் கும்பகோணத்தை அடுத்த முத்துபிள்ளைமண்டபம் ஊராட்சியுள்ள ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவா்கள் வென்றனா்.
போட்டியில் இப்பள்ளியில் 6 ஆம் வகுப்பு படிக்கும் சீத்தாலெட்சுமி, சுபஸ்ரீ, கவியரசன் ஆகியோா் இரண்டாமிடமும், 8 ஆம் வகுப்பு மாணவி தோனிகா மூன்றாமிடம் பெற்றனா்.
சாதனை படித்த மாணவா்களையும், கராத்தே பயிற்சியாளா் பஷீரையும் கும்பகோணம் வட்டாரக் கல்வி அலுவலா் பேபி, தலைமையாசிரியா் சாந்தி, வட்டார வள மேற்பாா்வையாளா் சரவணன், ஆசிரியா் பயிற்றுநா் அந்தோனிதாஸ் மற்றும் ஆசிரியா்கள், மாணவா்கள் பாராட்டினா்.