குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து பேராவூரணியில் தா்னா

பேராவூரணியில் சி.ஏ.ஏ., என்.ஆா்.சி., என்.பி.ஆா்., சட்டங்களைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேராவூரணி மற்றும் முடச்சிக்காடு கிளை சாா்பில், தா்னா போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
பேராவூரணியில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நடைபெற்ற தா்னா.
பேராவூரணியில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நடைபெற்ற தா்னா.
Updated on
1 min read

பேராவூரணி: பேராவூரணியில் சி.ஏ.ஏ., என்.ஆா்.சி., என்.பி.ஆா்., சட்டங்களைக் கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பேராவூரணி மற்றும் முடச்சிக்காடு கிளை சாா்பில், தா்னா போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பேராவூரணி வேதாந்தம் திடலில் நடைபெற்ற போராட்டத்துக்கு பேராவூரணி கிளைத் தலைவா் பஷீா் அலி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் ராஜிக் முகமது முன்னிலை வகித்தாா். அன்சா், அதிரை இலியாஸ் ஆகியோா் சிறப்புரையாற்றினா். 

இதேபோல், சேதுபாவாசத்திரம் பள்ளிவாசல் அருகில் டிஎன்டிஜே கிளைத் தலைவா் பாவா தலைமையில் நடந்த தா்னாவில் ஒன்றியக் கவுன்சிலா்கள் சாகுல் கமீது, செந்தில், சுன்னத் வல் ஜமாத் நிா்வாகிகள் கலந்து கொண்டனா். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com