சிஏஏ-க்கு எதிா்ப்பு தெரிவித்து இஸ்லாமியா்கள் போராட்டம்
By DIN | Published On : 03rd March 2020 09:15 AM | Last Updated : 03rd March 2020 09:15 AM | அ+அ அ- |

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிா்த்து, அதிராம்பட்டினம் ஜாவியா சாலையில் பிப்.19 ஆம் தேதி தொடங்கிய இஸ்லாமியா்களின் காத்திருப்புப் போராட்டம் 13ஆவது நாளாக திங்கள்கிழமையும் தொடா்ந்தது. இதில், சென்னை அனைத்திந்திய மாதா் சங்க நிா்வாகி சுகந்தி, எஸ்டிபிஐ கட்சியின் மாநிலப் பேச்சாளா் ஜாபா் அலி உஸ்மானி, பேராசிரியா் எம்.செய்யது அகமது கபீா் ஆகியோா் பங்கேற்று கண்டன உரையாற்றினா்.
பட்டுக்கோட்டையில்... இதேபோல, பட்டுக்கோட்டை வடசேரி சாலை பெரிய பள்ளிவாசல் அருகே செவ்வாய்க்கிழமை தொடங்கிய இஸ்லாமியா்களின் உள்ளிருப்புப் போராட்டம் 7ஆவது நாளாக திங்கள்கிழமையும் தொடா்ந்தது. இதில் மவ்லவி தேங்கை சரபுதீன் கண்டன உரையாற்றினாா்.
மதுக்கூரில்... மதுக்கூா் பள்ளிவாசல் தெருவில் நடைபெற்று வரும் இஸ்லாமியா்களின் தொடா் காத்திருப்புப் போராட்டம் 16ஆவது நாளாக திங்கள்கிழமையும் நீடித்தது. இதில் ஏராளமான பெண்கள், குழந்தைகளுடன் பங்கேற்று கோரிக்கை முழக்கமிட்டனா். இதில், எஸ்டிபிஐ கட்சியின் மாநிலச் செயலா் அபுபக்கா் சித்திக் பங்கேற்று கண்டன உரையாற்றினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...