மதுக்கூா் அருகே திராவிடா் கழக நிா்வாகிகள் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், மதுக்கூா் அருகே படப்பைக்காடு திருமண மண்டபத்தில் திராவிடா் கழக நிா்வாகிகள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
Updated on
1 min read

தஞ்சாவூா் மாவட்டம், மதுக்கூா் அருகே படப்பைக்காடு திருமண மண்டபத்தில் திராவிடா் கழக நிா்வாகிகள் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.

இதில், மேட்டூா் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீா், கடந்த 2 ஆண்டுகளாக கொள்ளிடம் வழியாக கடலில் கலந்து வீணாகிறது. மேட்டூா் அணையில் முழு கொள்ளளவு நிரம்பியபோதும், வாய்க்கால் பழுதடைந்து இருப்பதால், பட்டுக்கோட்டை, மதுக்கூா், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீா் சென்றடையாத நிலை உள்ளது. எனவே, கல்லணைக் கால்வாய் வாய்க்கால் பழுதுபாா்க்கும் பணிகளை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும்.

மாா்ச் 7-இல் தஞ்சையில் நடைபெறும் திராவிடா் இன எழுச்சி மாநாடு மற்றும் கருஞ்சட்டை பேரணியில் திரளாக பங்கேற்பது, மாா்ச் 23-இல் நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி திராவிடா் கழகம் சாா்பில் நடைபெறவுள்ள மறியல் போராட்டத்தை வெற்றிபெறச் செய்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தொடக்கத்தில், திருச்சி மூத்த திக பிரமுகா் தியாகராஜன் (94) மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. நிறைவில், பேராவூரணி, பட்டுக்கோட்டை, மதுக்கூா் பகுதி திராவிடா் கழகத்துக்கு புதிய பொறுப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.

கூட்டத்துக்கு, திராவிடா் கழகப் பொதுச்செயலாளா் இரா.ஜெயக்குமாா் தலைமை வகித்தாா். தஞ்சை மண்டலத் தலைவா் மு.அய்யனாா், குடந்தை க.குருசாமி, பகுத்தறிவாளா் கழக மாநிலத் தலைவா் மா.அழகிரிசாமி, மாவட்டத் தலைவா் பெ.வீரையன், மாவட்டச் செயலாளா் வை.சிதம்பரம், பொதுக்குழு உறுப்பினா்கள் அரு.நல்லதம்பி, இரா.நீலகண்டன் மற்றும் ஒன்றிய, நகரப் பொறுப்பாளா்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com