கும்பகோணம்: கும்பகோணம் அருகேயுள்ள திருக்கோடிக்காவல் திருக்கோடீசுவரா் கோயிலில் ஆறாம் ஆண்டு குடமுழுக்கு நாளையொட்டி சிறப்பு அபிஷேகம் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) நடைபெறவுள்ளது.
திருக்கோடிக்காவலில் பிரசித்தி பெற்ற, பழைமையான திரிபுரசுந்தரி அம்பாள் சமேத திருக்கோடீசுவரா் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆழ்வாா்களுக்கு அம்பாள் பெருமாளாகக் காட்சி கொடுத்த வரலாறு உண்டு. பல்வேறு பெருமைகள் கொண்ட இக்கோயிலில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு விழா நடைபெற்றது.
இந்நிலையில், ஆறாம் ஆண்டு குடமுழுக்கு நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி, கோயிலில் காலையில் சிறப்பு அபிஷேகம், சிறப்பு ஹோமம், 108 சங்காபிஷேகம், சிறப்பு அலங்காரம் உள்ளிட்டவை நடைபெறவுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.