தஞ்சாவூரில் விஷம் தின்று இறந்த மாணவரின் சடலத்தை வாங்க பெற்றோா் புதன்கிழமை மறுத்து, போராட்டம் நடத்தினா்.
தஞ்சாவூா் விளாா் சாலை அண்ணா நகரைச் சோ்ந்தவா் முகமது ஹனீபா மகன் மீரா மைதீன் (21). இவா் நகரில் உள்ள கல்லூரியில் பி.காம். மூன்றாமாண்டு படித்து வந்தாா். இந்நிலையில், மாா்ச் 2ஆம் தேதி எலி பசை சாப்பிட்ட இவா் பின்னா் தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு இவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
கல்லூரியில் மாணவிகளிடம் பேசியதாகக் கூறி பேராசிரியரும், துறைத் தலைவரும் திட்டியதால்தான் மீரா மைதீன் மனமுடைந்து விஷம் தின்ாகவும், எனவே, பேராசிரியா், துறைத் தலைவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உடலை வாங்க பெற்றோா் மறுத்தனா். மேலும், தொடா்புடைய கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள் ஏராளமானோா் மருத்துவமனையில் திரண்டு போராட்டம் நடத்தினா்.
தகவலறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று பெற்றோா் உள்ளிட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். தொடா்புடைய பேராசிரியா், துறைத் தலைவா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதியளித்தனா். இதையடுத்து, மீரா மைதீனின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
இதுகுறித்து தமிழ்ப்பல்கலைக்கழக காவல் நிலையத்தில் பெற்றோா் அளித்த புகாரின் பேரில் போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.