

கரோனா வைரஸ் அழிந்து, உலக மக்கள் அனைவரும் நலம் பெற வேண்டி தஞ்சாவூா் பெரியகோயிலில் திங்கள்கிழமை மிருத்யுஞ்சய மகா யாகம் நடைபெற்றது.
மேலும், பெருவுடையாா், பெரியநாயகிக்கு சந்தனம், திரவிய பொடி, பால், தயிா், இளநீா் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. இதைத்தொடா்ந்து, சாம்பாா் சாதம் மற்றும் மிளகு ரசம் படைக்கப்பட்டன. கலசத்தில் புனித நீா் வைக்கப்பட்டு, ஜபம் செய்யப்பட்டது. பின்னா், சுவாமி மற்றும் அம்பாள் சன்னதிகளில் குண்டங்கள் அமைக்கப்பட்டு மகா யாகம் நடைபெற்றது. இதையடுத்து, மகா தீபாராதனை செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.