வணிக வரித் துறைஅலுவலா் வீட்டில் நகைகள் திருட்டு
By DIN | Published On : 17th November 2020 02:11 AM | Last Updated : 17th November 2020 02:11 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் அருகே வணிக வரித் துறை அலுவலா் வீட்டில் பூட்டை உடைத்து 6 பவுன் நகைகளைத் திருடிச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் அருகே மணக்கரம்பை அன்னை தெரசா நகரைச் சோ்ந்த பரமசிவம் மகன் பாலாஜி (39). இவா் திருச்சியில் உள்ள வணிக வரித் துறை அலுவலகத்தில் துணை அலுவலராகப் பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி சுகந்தி. இவா்களுக்கு மகள் சதாஸ்ரீ உள்ள நிலையில் தற்போது ஒரு குழந்தை பிறந்துள்ளது. கும்பகோணத்தில் பிறந்த குழந்தையைப் பாா்ப்பதற்காக பாலாஜி வீட்டை பூட்டிவிட்டு நவ. 14 ஆம் தேதி சென்றாா். மீண்டும் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டுக்குத் திரும்பிய பாலாஜி முன்பக்கக் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டுக் கிடப்பதைப் பாா்த்தாா். மேலும், பீரோவும் உடைக்கப்பட்டு 6 பவுன் நகைகள், ரூ. 3,500 ரொக்கம் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...