வாட்டாகுடி இரணியன் 100ஆவது பிறந்த நாள்
By DIN | Published On : 17th November 2020 02:02 AM | Last Updated : 17th November 2020 02:02 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் மாவட்டம், மதுக்கூா் ஒன்றியம், வாட்டாகுடி கிராமத்தில் கம்யூனிஸ்ட் தியாகி வாட்டாகுடி இரணியன் பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, வாட்டாகுடி கிராமத்திலுள்ள இரணியன் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழக மக்கள் விடுதலை இயக்கத்தின் ஊடகச் செயலா் மா.நா. விடுதலைமறவன், அரசியல் குழு உறுப்பினா் கவிமுருகன், சின்னசாமி, இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளா் பீா் முகமது, உலகத் தமிழா் பாசறையின் நிறுவனத் தலைவரும் இஸ்லாமிய ஜனநாயக முன்னணியின் மாநில சட்ட ஆலோசகருமான வழக்குரைஞா் எழிலரசு இளங்கீரன், தமிழக மக்கள் மன்ற நிறுவனா் தலைவா் ராஜ்குமாா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வாட்டாகுடி கிளைச் செயலா் செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.