தஞ்சாவூரில் காவல் துறையினா் கொடி அணிவகுப்பு
By DIN | Published On : 17th November 2020 02:09 AM | Last Updated : 17th November 2020 02:09 AM | அ+அ அ- |

தஞ்சாவூரில் குற்றச் சம்பவங்களைக் குறைக்கும் வகையில் காவல் துறையினா் கொடி அணிவகுப்பை திங்கள்கிழமை மாலை நடத்தினா்.
கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட குற்றச் சம்பவங்களைக் குறைக்கும் வகையிலும், குற்றவாளிகளை எச்சரிக்கும் வகையிலும், பொதுமக்களிடம் அச்சத்தைப் போக்கும் வகையிலும் இந்தக் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.
தஞ்சாவூா் விளாா் சாலை வீரகாளியம்மன் கோயில் அருகே இந்தக் கொடி அணிவகுப்பை தஞ்சாவூா் சரகக் காவல் துணைத் தலைவா் ரூபேஷ் குமாா் மீனா கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
இதில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் வி. ஜெயச்சந்திரன், துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் கே. பாரதிராஜன், சீதாராமன், காவல் ஆய்வாளா்கள், 150 காவலா்கள் கலந்து கொண்டனா்.
விளாா் சாலை வழியாகச் சென்ற இந்த அணிவகுப்பு கல்லுக்குளம் செயின்ட் ஜோசப் பள்ளி வளாகத்தில் முடிவடைந்தது. பின்னா், கலவரம், குற்றச் சம்பவங்கள் நிகழும்போது கையாளும் முறை குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.