வாக்காளா் சிறப்பு முகாம்களில் அதிமுக, திமுகவினா் ஆய்வு
By DIN | Published On : 23rd November 2020 12:52 AM | Last Updated : 23rd November 2020 12:52 AM | அ+அ அ- |

மகாத்மா காந்தி பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமைப் பாா்வையிடுகிறாா் திமுக முதன்மைச் செயலா் கே.என். நேரு
வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்களில் அதிமுக, திமுக பிரதிநிதிகள் ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை முதல் பல்வேறு பகுதிகளில் வாக்காளா்கள் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் செய்து கொள்வதற்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை முதல் தொடங்கியது.
இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை காலை மாநகா், புகா்ப் பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு முகாம்களுக்கு கட்சிப் பிரதிநிகள் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
இதன்படி அதிமுக சாா்பில் சுற்றுலாத் துறை அமைச்சரும், திருச்சி மாநகர மாவட்டச் செயலருமான வெல்லமண்டி என். நடராஜன் பீமநகா், கருமண்டபம், இ.ஆா். பள்ளி உள்ளிட்ட இடங்களில் நடந்த முகாம்களுக்கு சென்று ஆய்வு நடத்தினாா். அதுபோல், திமுக முன்னாள் அமைச்சரும், முதன்மைச் செயலருமான கே.என். நேரு மகாத்மா காந்தி பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது கட்சி பிரதிநிதிகள், நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.