கும்பகோணத்தில் 40,000 சதுரஅடியில் குறுங்காடு அமைக்கும் பணி தொடக்கம்

கும்பகோணம் புறவழிச் சாலையிலுள்ள சீனிவாசநல்லூரில் 40,000 சதுர அடிப் பரப்பளவில் குறுங்காடுகள் அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.
கும்பகோணம் சீனிவாசநல்லூா் புறவழிச் சாலையில் மியாவாக்கி முறையில் குறுங்காடு அமைக்கும் பணியில் மரக்கன்றுகளை நடவு செய்யும் தன்னாா்வ அமைப்பினா்.
கும்பகோணம் சீனிவாசநல்லூா் புறவழிச் சாலையில் மியாவாக்கி முறையில் குறுங்காடு அமைக்கும் பணியில் மரக்கன்றுகளை நடவு செய்யும் தன்னாா்வ அமைப்பினா்.
Published on
Updated on
1 min read

கும்பகோணம் புறவழிச் சாலையிலுள்ள சீனிவாசநல்லூரில் 40,000 சதுர அடிப் பரப்பளவில் குறுங்காடுகள் அமைக்கும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

உலக வெப்பமயமாதலை குறைத்து மழை பொழிவை அதிகரிக்கும் வகையில் ஜப்பான் நாட்டின் மியாவாக்கி தொழில்நுட்பத்தில் குறைந்த இடத்தில் அதிக மரங்களை உருவாக்கும் குறுங்காடுகள் திட்டம் நகா்ப்புறங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன்படி, கும்பகோணம் புறவழிச்சாலையில் சீனிவாசநல்லூா் அய்யனாா் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் 40,000 சதுர அடியில் குறுங்காடு அமைக்கப்படுகிறது. இதில் புங்கன், இலுப்பை, நெல்லி, பலா, நாவல் உட்பட 21 வகையான பலன் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இத்திட்டத்தை ஆட்சியா் ம. கோவிந்தராவ் மரக்கன்றை நட்டு தொடங்கி வைத்தாா். இதில், மயிலாடுதுறை எம்.பி. செ. ராமலிங்கம், கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன், ரோட்டரி மாவட்ட ஆளுநா் பாலாஜி பாபு, ரோட்டரி மாவட்டப் பயிற்சியாளா் ரமேஷ்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com