திருட்டு நடைபெற்ற அத்திவெட்டி பிச்சினிக்காடு அருள்மிகு முளைக்கொட்டு மாரியம்மன் கோயில்.
திருட்டு நடைபெற்ற அத்திவெட்டி பிச்சினிக்காடு அருள்மிகு முளைக்கொட்டு மாரியம்மன் கோயில்.

மதுக்கூா் அருகே கோயிலில் தங்கம், வெள்ளி நகைகள் திருட்டு

தஞ்சாவூா் மாவட்டம், மதுக்கூா் அருகிலுள்ள அத்திவெட்டி பிச்சினிக்காடு அருள்மிகு முளைக்கொட்டு மாரியம்மன் கோயிலில் நகைப் பெட்டகத்தை

தஞ்சாவூா் மாவட்டம், மதுக்கூா் அருகிலுள்ள அத்திவெட்டி பிச்சினிக்காடு அருள்மிகு முளைக்கொட்டு மாரியம்மன் கோயிலில் நகைப் பெட்டகத்தை உடைத்து, தங்கம் மற்றும் வெள்ளி நகைகளைத் திருடிச் சென்றவா்களைக் காவல்துறையினா் தேடி வருகின்றனா்.

இக்கோயிலில் வெள்ளிக்கிழமை இரவு பூஜை முடிந்த பின்னா், பூசாரி கோயிலை பூட்டி வீட்டுக்குச் சென்று விட்டாா். இந்நிலையில் நள்ளிரவுக்கு மேல் கோயிலின் வடக்குப் புறத்திலுள்ள கதவின் பூட்டை உடைத்து கோயிலுக்குள் மா்ம நபா்கள் புகுந்தனா்.

விழா காலங்களில் அம்மனுக்கு அணிவிக்கப்படும் நகைகள் இருந்த பெட்டகத்தை உடைத்து அதிலிருந்த 9 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.5,000 ரொக்கம் ஆகியவற்றையும், கோயில் கருவறை பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த அரை பவுன் தாலியையும் உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் திருடிச் சென்று விட்டனா்.

சனிக்கிழமை காலையில்தான் கோயில் நிா்வாகத்துக்கு திருட்டு குறித்து தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தகவலறிந்த பட்டுக்கோட்டை டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் மற்றும் மதுக்கூா் காவல் நிலையத்தினா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

தஞ்சையிலிருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கோயிலில் இருந்து சிறிது தொலைவு ஓடி நின்று விட்டது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. தடயவியல் நிபுணா்கள் திருட்டில் ஈடுபட்டவா்களின் ரேகைகளைப் பதிவு செய்தனா். இதுகுறித்து, கோயில் நிா்வாகக் குழுத் தலைவா் அ.வைரவசுந்தரம் சனிக்கிழமை அளித்த புகாரின் பேரில் மதுக்கூா் காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com