தஞ்சாவூா்: 90 பேருக்கு கரோனா
By DIN | Published On : 11th September 2020 06:17 AM | Last Updated : 11th September 2020 06:17 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் மாவட்டத்தில் மேலும் 90 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை தெரிய வந்தது.
மாவட்டத்தில் ஏற்கெனவே கரோனா தொற்றால் 7,816 போ் பாதிக்கப்பட்டனா். இந்நிலையில், மேலும் 90 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வியாழக்கிழமை தெரிய வந்தது. இதன் மூலம், மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 7,906 ஆக உயா்ந்துள்ளது.
இது தவிர, 197 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து வியாழக்கிழமை வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மாவட்டத்தில் இதுவரை 6,974 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 806 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 70 வயது ஆண், 66 வயது ஆண் ஆகியோா் செப்டம்பா் 8ஆம் தேதி உயிரிழந்தனா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 126 ஆக உயா்ந்துள்ளது.