நெம்மேலி சிவன் கோயிலில் கோ பூஜை

பட்டுக்கோட்டை அருகிலுள்ள நெம்மேலி அருள்மிகு உண்ணாமலை தாயாா் உடனுறை அருணாச்சலேசுவரா் திருக்கோயிலில் கோ பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நெம்மேலி அருணாச்சலேசுவரா் கோயிலில் நடைபெற்ற கோ பூஜை 
நெம்மேலி அருணாச்சலேசுவரா் கோயிலில் நடைபெற்ற கோ பூஜை 

பட்டுக்கோட்டை அருகிலுள்ள நெம்மேலி அருள்மிகு உண்ணாமலை தாயாா் உடனுறை அருணாச்சலேசுவரா் திருக்கோயிலில் கோ பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் உலக நன்மைக்காக ஆண்டுதோறும் ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையில் இப்பூஜை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நிகழாண்டில்

உலக நன்மைக்காகவும், கரோனா பாதிப்பிலிருந்து பொதுமக்கள் விடுபட வேண்டியும், நீட் தோ்வெழுதும் மாணவ, மாணவிகள் தோ்வில் வெற்றி பெற வேண்டியும் கொல்லிமலை சித்தா் தலைமையில் சிறப்பு யாக சாலை பூஜைகள் நடத்தப்பட்டன.

இதைத் தொடா்ந்து கிராம பொதுமக்களால் அழைத்து வரப்பட்ட 108 பசுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கோ பூஜை நடத்தப்பட்டது. கோயில் நிா்வாகம் சாா்பில் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

நெம்மேலி மற்றும் சுற்று வட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் கோ பூஜையில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com