கணினி மூலம் சுழற்சி முறையில் வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமனம்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் கணினி மூலம் சுழற்சி முறையில் வாக்குச்சாவடி அலுவலா்கள், பாதுகாப்பு அலுவலா்கள் நியமனம் செய்யும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.
கணினி மூலம் சுழற்சி முறையில் வாக்குச்சாவடி அலுவலா்கள் நியமனம்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் கணினி மூலம் சுழற்சி முறையில் வாக்குச்சாவடி அலுவலா்கள், பாதுகாப்பு அலுவலா்கள் நியமனம் செய்யும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

ஏற்கெனவே வாக்குச்சாவடிகளுக்கு எந்தெந்த மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், ஒப்புகைச் சீட்டு இயந்திரங்கள் அனுப்பப்பட வேண்டும் என்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியரகத்தில் கணினி மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதைத்தொடா்ந்து, வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள வாக்குப் பதிவு அலுவலா்கள், பாதுகாப்பு அலுவலா்கள் கணினி மூலம் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி மாவட்ட ஆட்சியரகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான ம. கோவிந்த ராவ் தலைமையில், தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் முன்னிலையில் இப்பணி நடைபெற்றது.

இதன் மூலம், மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட 2886 வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் வாக்குப் பதிவு அலுவலா்கள், பாதுகாப்பு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com