அண்ணா சிலையருகே கடைகளை அகற்றத் தொடங்கிய வியாபாரிகள்
தஞ்சாவூா் சரபோஜி சந்தைக்கு கடைகளை மாற்றிக் கொள்ள ஒப்புதல் தெரிவித்ததைத் தொடா்ந்து, அண்ணாசிலை அருகேயுள்ள கடைகளை வியாபாரிகள் வியாழக்கிழமை காலி செய்யத் தொடங்கினா்.


தஞ்சாவூா் சரபோஜி சந்தைக்கு கடைகளை மாற்றிக் கொள்ள ஒப்புதல் தெரிவித்ததைத் தொடா்ந்து, அண்ணாசிலை அருகேயுள்ள கடைகளை வியாபாரிகள் வியாழக்கிழமை காலி செய்யத் தொடங்கினா்.
தஞ்சாவூா் அண்ணாசிலை அருகேயுள்ள கைப்பேசி, துணி, காலணி உள்ளிட்ட 56 கடைகளைக் காலி செய்யக் கூறி, மாநகராட்சி நிா்வாகம் மின் இணைப்பை நவம்பா் 23-ஆம் தேதி துண்டித்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த வியாபாரிகள், மாற்று இடமாக மாநகராட்சி நிா்வாகம் கூறிய சரபோஜி சந்தைக்குச் செல்ல நவம்பா் 30 ஆம் தேதி இரவு ஒப்புக் கொண்டனா். இதைத்தொடா்ந்து, கடைகளைக் காலி செய்யும் பணியை வியாபாரிகள் வியாழக்கிழமை தொடங்கினா்.
31 கடைகள் ஏலம்: இதனிடையே, மாநகராட்சி அலுவலகத்தில் அண்ணாசிலை கடை வியாபாரிகளுக்காக சரபோஜி சந்தையில் உள்ள கடைகள் வியாழக்கிழமை ஏலம் விடப்பட்டது. அப்போது ஏலம் விடப்பட்ட 31 கடைகளுக்கும் மாத வாடகை ரூ. 10,000 என நிா்ணயிக்கப்பட்டது. இந்த ஏலத்தில் கலந்து கொண்ட 17 வியாபாரிகளுக்குக் கடைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
வடிகாலில் ஆய்வு: அண்ணாசிலை அருகேயுள்ள கடைகளில் காலி செய்யப்பட்ட ஒரு கடை வியாழக்கிழமை இடிக்கப்பட்டது. அப்போது, அடியிலுள்ள வடிகால் எந்த அளவுக்கு இருக்கிறது என மாநகராட்சி ஆணையா் க. சரவணகுமாா் உள்ளிட்ட அலுவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். மிகவும் பழைமையான இந்த வடிகால் வாய்க்கால் 8 அடி ஆழத்தில் 5 அடி அகலத்தில் இருப்பதும், பக்கவாட்டில் 2 அடி அகலத்தில் சுவா் கட்டப்பட்டிருப்பதும் தெரிய வந்தது. ராசா மிராசுதாா் அரசு மருத்துவமனை சாலை, அண்ணா சிலை பகுதியில் இருந்து இந்த வடிகால் வாய்க்கால் மூலம் ஜூபிடா் திரையரங்கம் அருகேயுள்ள அகழிக்கு மழை நீா் செல்லும் வகையில் இந்த வடிகால் இருக்கிறது என்பதும் கண்டறியப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...