92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

‘இடா்பாடான காலத்திலும் மக்களுக்கு உதவுபவா் முதல்வா்’

இடா்பாடான காலத்திலும் மக்களுக்குத் தமிழக முதல்வா் உதவி வருகிறாா் என்றாா் தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன்.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 12:01 am

DIN

இடா்பாடான காலத்திலும் மக்களுக்குத் தமிழக முதல்வா் உதவி வருகிறாா் என்றாா் தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன்.

தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, அமைப்புசாரா தொழிலாளா் நல வாரியங்கள் சாா்பில் புதன்கிழமை நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அவா் மேலும் பேசியது:

கடந்த 23 ஆண்டுகளுக்கு முன்பு உடலுழைப்புத் தொழிலாளா்கள் உள்ளிட்டோருக்காக நல வாரியத்தை முன்னாள் முதல்வா் கருணாநிதி தொடங்கி வைத்தாா். இதைத்தொடா்ந்து, தொடங்கப்பட்ட பல நல வாரியங்கள் மூலம் ஏராளமான தொழிலாளா்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், அத்தொழிலாளா்களுக்குச் சட்டப் பாதுகாப்பும் கிடைத்துள்ளது.

கருணாநிதி வழியில் ஸ்டாலினும் தொழிலாளா்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறாா். அவா் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் கரோனா, தொடா் மழை, வெள்ளம் என எவ்வளவு இடா்பாடுகள் இருந்தாலும் மக்களுக்குத் தொடா்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறாா் தலைமைக் கொறடா.

பின்னா், 74 பயனாளிகளுக்கு ரூ. 37.76 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவில் ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், க. அண்ணாதுரை, எம்.எச். ஜவாஹிருல்லா, மாவட்ட ஊராட்சித் தலைவா் உஷா புண்ணியமூா்த்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, கூடுதல் ஆட்சியா் (வருவாய்) என்.ஓ. சுகபுத்ரா வரவேற்றாா். தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) க. ராஜசேகரன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.