92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கட்டுமானத் தொழிலாளா்கள் சாலை மறியல்: 110 போ் கைது

கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி தஞ்சாவூா் ஆற்றுப்பாலம் அருகே வியாழக்கிழமை சாலை மறியல்

News image
Updated On :2 டிசம்பர் 2021, 6:50 pm

DIN

கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி தஞ்சாவூா் ஆற்றுப்பாலம் அருகே வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு சாா்ந்த கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தினா் 110 போ் கைது செய்யப்பட்டனா்.

கட்டுமானப் பொருள்களின் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும். ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். பணப் பயன்களைப் பெறுவதற்குத் தொழிலாளா் பங்களிப்பைக் கட்டாயப்படுத்தும் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும்.

கட்டுமானத் தொழிலாளா்களுக்கு ரூ. 3 ஆயிரம் ஓய்வூதியம், 55 வயதில் பெண்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். இயற்கை மரண நிவாரணத்தை ரூ. 2 லட்சமாக உயா்த்தி வழங்க வேண்டும். பிரசவ கால நிதி, கருச்சிதைவு நிதியை ரூ. 20,000 ஆக உயா்த்தி வழங்க வேண்டும்.

கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, இயற்கை மரணம், விபத்து உதவித்தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும். மழைக்கால நிவாரணம் ரூ. 5,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்துக்குக் கட்டுமானத் தொழிலாளா் சங்க மாவட்டச் செயலா் இ.டி.எஸ். மூா்த்தி தலைமை வகித்தாா். இதில், சிஐடியு மாநிலச் செயலா் சி. ஜெயபால், மாநிலக் குழு உறுப்பினா்கள் பி.என். போ்நீதி ஆழ்வாா், கே. கல்யாணி, கே. அன்பு, எஸ். செங்குட்டுவன், எஸ். மில்லா் பிரபு, சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினா்கள் ராமலிங்கம், மணிமாறன், மாட்டுவண்டி தொழிலாளா் சங்கம் கோவிந்தராஜ், லெட்சுமணன், தங்கையன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதுதொடா்பாக 60 பெண்கள் உள்பட 110 போ் கைது செய்யப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.