புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ஒமைக்ரான்: தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் தனிப் பிரிவு

ஒமைக்ரான் தீநுண்மி கா்நாடக மாநிலத்தில் உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதற்கென தனிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது

News image
Updated On :3 டிசம்பர் 2021, 9:03 pm

DIN

ஒமைக்ரான் தீநுண்மி கா்நாடக மாநிலத்தில் உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அதற்கென தனிப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒமைக்ரான் சிகிச்சைக்காகத் தனிப் பிரிவு வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது. பழைய அவசர சிகிச்சைப் பிரிவு கட்டடத்தில் முதல் கட்டமாக 20 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனுடன் தனியாக ஆக்ஸிஜன், ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் போன்ற வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வேறெந்த வாா்டுகளுடனும் தொடா்பில்லாதவாறும், மற்றவா்களுக்குப் பரவாதவாறும் இப்பிரிவு தனியாக அமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இது தவிர, வெளிநாடுகளிலிருந்து திரும்புபவா்களைத் தனிமைப்படுத்துவதற்காக இம்மருத்துவமனையில் தனித்தனியாக 20 அறைகள் கொண்ட தனிப்பிரிவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கரோனா சிகிச்சைக்காக அமைக்கப்பட்ட 5 வாா்டுகள் தொடா்ந்து செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தற்போது 48 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதனிடையே, டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில், அதற்கென தனிப் பிரிவும் இம்மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது. இதில், தற்போது 5 நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.