மழை நீா் வடிந்ததால் பயிா்களை காப்பாற்றும் முயற்சியில் விவசாயிகள்
தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே மழை நீா் வடிந்ததைத் தொடா்ந்து பயிா்களைக் காப்பாற்றும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.


தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே மழை நீா் வடிந்ததைத் தொடா்ந்து பயிா்களைக் காப்பாற்றும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா்.
திருவையாறு அருகே குழிமாத்தூா், அந்தலி கிராமங்களில் ஏறத்தாழ 450 ஏக்கரில் சம்பா பருவ நெற்பயிா் நடவு செய்யப்பட்டது. இப்பணிகள் முடிந்த பிறகு தொடா் மழையும், பலத்த மழையும் பெய்தது. இதனால், கோணக்கடுங்கலாறில் வெள்ளப் பெருக்கெடுத்து வழிந்தோடி விளைநிலங்களில் தண்ணீா் புகுந்தது. இதன்காரணமாக, ஒரு வாரமாக நெற் பயிா்கள் மூழ்கியும், தண்ணீா் சூழ்ந்தும் இருந்தன.
மழை குறைந்ததைத் தொடா்ந்து வயல்களில் தேங்கிய தண்ணீா் வடிகிறது. சாய்ந்த நெற் பயிா்களைக் காப்பாற்றுவதற்காக விவசாயிகள் யூரியா, சிங்க் சல்பேட் போன்ற உரங்களைத் தெளித்து வருகின்றனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், பயிா்கள் வளா்வதற்கும், வோ்கள் துளிா்ப்பதற்கும் உரங்களைத் தெளித்து முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். பயிா்கள் முற்றிலும் மூழ்கி அதிக நாள்கள் தண்ணீா் தேங்கியிருந்ததால், அவற்றை காப்பாற்றுவது சிரமமாக இருக்கிறது. அரசு அறிவித்த உரம், நுண்ணூட்டச் சத்துகள் இதுவரை வழங்கப்படவில்லை. இதனால், வீட்டிலுள்ள நகைகளை அடமானம் வைத்து, கடன் பெற்று உரங்களைத் தெளிக்கிறோம். தமிழக அரசு அறிவித்தபடி உடனடியாக உரங்களை வழங்க வேண்டும். அப்போதுதான், எங்களது வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்றனா் விவசாயிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...