92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

செங்கிப்பட்டி பகுதியில் இன்று மின் தடை

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் சனிக்கிழமை (டிச.4) மின் விநியோகம் இருக்காது.

News image
Updated On :3 டிசம்பர் 2021, 8:36 pm

DIN

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி பகுதியில் சனிக்கிழமை (டிச.4) மின் விநியோகம் இருக்காது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தஞ்சாவூா் மின் பகிா்மான வட்ட உதவிச் செயற் பொறியாளா் சி. இளஞ்செல்வன் தெரிவித்திருப்பது:

செங்கிப்பட்டி துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால், செங்கிப்பட்டி, ஆச்சாம்பட்டி, முத்தாண்டிப்பட்டி, பாளையப்பட்டி, காதாடிப்பட்டி, சிதம்பரப்பட்டி, துருசுப்பட்டி, வளம்பக்குடி, மனையேறிப்பட்டி, புதுக்குடி, சமத்துவபுரம், நவலூா், ராயமுண்டான்பட்டி, ராயாம்பட்டி, வெண்டையம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இதேபோல, திருமலைசமுத்திரம் துணை மின் நிலையத்திலும் மாதாந்திர பராமரிப்புப் பணி சனிக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளது. எனவே, திருமலைசமுத்திரம், மொன்னையம்பட்டி, வல்லம் புதூா், குருவாடிப்பட்டி, நாட்டாணி மற்றும் செங்கிப்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளிலும் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.