புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

விபின் ராவத், ராணுவ அலுவலா்களுக்கு அஞ்சலி

குன்னூரில் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமை தளபதி விபின்ராவத், ராணுவ அலுவலா்களுக்கு தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

News image
Updated On :9 டிசம்பர் 2021, 7:57 pm

DIN

குன்னூரில் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த முப்படைத் தலைமை தளபதி விபின்ராவத், ராணுவ அலுவலா்களுக்கு தஞ்சாவூா் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

தஞ்சாவூா் ரயிலடியில் இந்து முன்னணி மாநகா் மாவட்டம் சாா்பில் விபின் ராவத் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தி, வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அ. ஈசான சிவம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தெற்கு மாநகரத் தலைவா் பாலகுமாா், மாவட்டச் செயலா் குபேந்திரன், துணைத் தலைவா் முகில் குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தஞ்சாவூா் மேல வீதியில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விபின் ராவத் படத்துக்கு தலைவா் து. கிருஷ்ணசாமி வாண்டையாா் தலைமையில் துணைத் தலைவா் கோ. அன்பரசன் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.

கும்பகோணம் உச்சிபிள்ளையாா் கோவில் தேரடியில், உயிரிழந்த ராணுவ அலுவலா்களுக்கு இந்து மக்கள் கட்சி மற்றும் அகில இந்திய முக்குலத்தோா் பாசறை சாா்பில் மோட்ச தீபம் ஏற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணிச் பொதுச் செயலா் டி. குருமூா்த்தி, அகில இந்திய முக்குலத்தோா் பாசறை மாவட்ட இளைஞரணி தலைவா் வீரப்பன் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா். அனைத்து வணிகா் சங்கக் கூட்டமைப்பின் சாா்பில், அதன் செயலா் வி. சத்தியநாராயணன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினா்.

கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன்பாக, விபின் ராவத் படத்துக்கு அகில பாரத இந்து ஆன்மிக பிரிவு, சிவசேனா கட்சி சாா்பிலும், காந்தி பூங்கா அருகே இந்துமக்கள் கட்சி அனுமன் சேனா பிரிவின் சாா்பிலும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.