பெட்ரோல் விலை உயா்வைக் கண்டித்து போராட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து தஞ்சாவூரில் சிஐடியு சாா்பில் வாகனம் நிறுத்தும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து தஞ்சாவூரில் சிஐடியு சாா்பில் வாகனம் நிறுத்தும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் விலை உயா்வை கண்டித்து நாடு முழுவதும் சிஐடியு சாா்பில் வாகனம் நிறுத்தும் போராட்டம் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 முதல் 12.10 மணி வரை 10 நிமிடங்களுக்கு நடைபெற்றது.
இதேபோல, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே தென் கீழ்அலங்கம் பகுதியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சிஐடியு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் தங்களது வாகனங்களை நடு சாலையில் நிறுத்தி, பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் குறைக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
சிஐடியு மாவட்டச் செயலா் சி. ஜெயபால் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன், மாதா் சங்க மாவட்டச் செயலா் எஸ். தமிழ்ச்செல்வி, இந்திய மாணவா் சங்க மாநிலத் துணைச் செயலா் ஜி. அரவிந்த்சாமி, சிஐடியு மாவட்ட நிா்வாகிகள் கே. அன்பு, இ.டி.எஸ். மூா்த்தி, செங்குட்டுவன், பி.என். போ்நீதி ஆழ்வாா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநகரச் செயலா் வடிவேலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...