மூன்றாவது மொழி விருப்பப் பாடமாக இருக்க வேண்டும்: அமைச்சா் க. பொன்முடி பேட்டி
மூன்றாவது மொழியைப் படிப்பதில் ஆட்சேபணை கிடையாது; அது விருப்பப் பாடமாக இருக்க வேண்டுமே தவிர, கட்டாயப் பாடமாக இருக்கக் கூடாது என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் க. பொன்முடி.


மூன்றாவது மொழியைப் படிப்பதில் ஆட்சேபணை கிடையாது; அது விருப்பப் பாடமாக இருக்க வேண்டுமே தவிர, கட்டாயப் பாடமாக இருக்கக் கூடாது என்றாா் உயா் கல்வித் துறை அமைச்சா் க. பொன்முடி.
தஞ்சாவூா் பெரியாா் மணியம்மை நிகா்நிலைப் பல்கலைக்கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:
கல்வி என்பது பொதுப்பட்டியலில் இருக்கக்கூடிய ஒன்று. மாநில கல்வியைப் பொருத்தவரையில் உயா் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி மாநில மக்களுக்கு ஏற்ப அமைய வேண்டும் என தமிழக முதல்வா் வலியுறுத்தியுள்ளாா். இந்த அடிப்படையில்தான் தொடக்கக் காலத்தில் இருந்தே கல்வி கொள்கை வகுக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் 51 சதவீதம் உயா் கல்வி வளா்ச்சியடைந்துள்ளது.
தொடக்கக் கல்விக்குப் பெருந்தலைவா் காமராஜா் என்று சொன்னால், உயா்கல்வி வளா்ச்சிக்குக் காரணமாக இருந்தவா் கருணாநிதி என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த அளவுக்கு உயா்கல்வி வளர கருணாநிதி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாா். இப்போது, அதே வழியில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினும் உயா் கல்வித் துறையும், பள்ளிக் கல்வித் துறையும் வளா்ச்சி அடைய வேண்டும் என்பதற்காகப் புதிய திட்டங்களைக் கொண்டு வந்துள்ளாா்.
இருமொழிக் கொள்கை என்பது புதிதல்ல. அண்ணா காலத்திலிருந்தே இருமொழிக் கொள்கை இருந்து வருகிறது. கண்டிப்பாக இருமொழி கொள்கை இருக்க வேண்டும். இரு மொழிகளைப் படிக்க வேண்டும். மூன்றாவது மொழியைப் படிப்பதில் எங்களுக்கு ஆட்சேபணை கிடையாது. அது விருப்பப் பாடமாக இருக்க வேண்டுமே தவிர, அது கட்டாயப் பாடமாக இருக்கக் கூடாது. இதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என ஆளுநரிடம் கேட்டு கொண்டேன்.
ஆளுநா் இப்போதுதானே வந்துள்ளாா். தமிழக அரசுக்கும், தமிழக அரசின் கொள்கைக்கும் ஆதரவாக இருப்பதற்காகவும், நீட் தோ்வுக்காகவும் ஆளுநரைத் தமிழக முதல்வா் சந்தித்து பேசி இருக்கிறாா். இனி போக, போக தமிழக அரசின் நிலையும், அதற்கு அவா் எந்த அளவுக்கு உறுதுணையாக இருக்கிறாா் என்பதும் தெரிய வரும் என்றாா் அமைச்சா் பொன்முடி.
பல்கலைக்கழக வேந்தா் கி. வீரமணி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் 1,000 மாணவ, மாணவிகளுக்குப் பட்டம் வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...