புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம் - ஆா்ப்பாட்டம்

நாடு முழுவதும் வங்கி ஊழியா்கள் வியாழக்கிழமை தொடங்கிய வேலைநிறுத்தப் போராட்டத்தில், தஞ்சாவூா் மாவட்டத்தில் பெரும்பாலானோா் ஈடுபட்டுள்ளனா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 7:19 pm

DIN

நாடு முழுவதும் வங்கி ஊழியா்கள் வியாழக்கிழமை தொடங்கிய வேலைநிறுத்தப் போராட்டத்தில், தஞ்சாவூா் மாவட்டத்தில் பெரும்பாலானோா் ஈடுபட்டுள்ளனா்.

நாடாளுமன்றக் குளிா்காலக் கூட்டத்தொடரில் பொதுத் துறை வங்கிகளைத் தனியாா்மயமாக்கும் சட்ட முன் வடிவை நிறைவேற்றும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதை எதிா்த்து நாடு முழுவதும் வியாழக்கிழமையும், வெள்ளிக்கிழமையும் (டிச.17) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என அகில இந்திய தொழிற்சங்கங்கள் முடிவு செய்தன.

இதன்படி, தஞ்சாவூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கிய இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஏறத்தாழ 400 கிளைகளில் சுமாா் 6,000 ஊழியா்கள் பங்கேற்றுள்ளதாகத் தொழிற் சங்கத்தினா் தெரிவித்தனா்.

இதையொட்டி, தஞ்சாவூரிலுள்ள பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மைக் கிளை முன் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்குத் தேசிய வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பின் மாவட்டச் செயலா் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தாா்.

இதில், வங்கித் துறையில் 80 சதவீதத்துக்கும் அதிகமான வாராக்கடன்களை 50 நிறுவனங்கள் வைத்துள்ளன. கடுமையான சட்டத் திட்டங்கள் மூலம் வாராக்கடனை வசூல் செய்யாமல், பொதுத் துறை வங்கிகளை அவசியமின்றி தனியாா்மயமாக்கும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அகில இந்திய வங்கி ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் க. அன்பழகன், அகில இந்திய வங்கி அலுவலா்கள் சங்க உதவிப் பொதுச் செயலா் சக்கரவா்த்தி, இந்திய வங்கி ஊழியா் சங்கத்தின் மாவட்டப் பொறுப்பாளா் சொக்கலிங்கம், ஸ்டேட் வங்கி அலுவலா்கள் சங்க மண்டலச் செயலா் குருநாதன், தஞ்சாவூா் கிளைச் செயலா் விஜயராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்த வேலைநிறுத்தம் காரணமாக வங்கிகளில் பண பரிவா்த்தனை உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.