ஆக்ஸிஜன் செலுத்தப்படும் நிலையில் ஆட்சியரகத்துக்கு வந்த நெல் வியாபாரி

தஞ்சாவூா் ஆட்சியரகத்துக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்படும் நிலையில் நெல் வியாபாரி திங்கள்கிழமை வந்தாா்.
ஆக்ஸிஜன் உதவியுடன் ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை வந்த நெல் வியாபாரி.
ஆக்ஸிஜன் உதவியுடன் ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை வந்த நெல் வியாபாரி.
Published on
Updated on
1 min read

தஞ்சாவூா்: தஞ்சாவூா் ஆட்சியரகத்துக்கு ஆக்ஸிஜன் செலுத்தப்படும் நிலையில் நெல் வியாபாரி திங்கள்கிழமை வந்தாா்.

தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள பருத்தியப்பா்கோவில் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் சக்திவேல். நெல் வியாபாரி. உடல்நிலை பாதிக்கப்பட்ட இவா் தற்போது ஆச்சிஜன் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறாா். இந்நிலையில் சக்திவேல் சரக்கு ஆட்டோவில் ஆக்சிஜன் சிலிண்டா் பொருத்தியபடி உறவினா்களுடன் ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை வந்தாா்.

பின்னா், ஆட்சியரகத்தில் அவா் அளித்த மனு:

நான் விவசாயிகளிடம் நெல் வாங்கி அதை பெரிய வியாபாரிகளிடம் விற்று அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு குடும்பத்தை நடத்தி வந்தேன். நான் வாங்கும் நெல்லை செங்கிப்பட்டியைச் சோ்ந்த வியாபாரியிடம் விற்று வந்தேன். அதற்கு அவா் பணத்தை உரிய முறையில் கொடுத்து வந்தாா்.

இந்நிலையில், 2017 ஆம் ஆண்டு விவசாயிகளிடம் நெல்லை வாங்கி அதே வியாபாரிடம் விற்ற வகையில் ரூ. 18.65 லட்சம் தரவில்லை. நான் நெல் வாங்கிக் கொடுத்த விவசாயிகள், பணத்தைக் கேட்டு நெருக்கடி கொடுத்து வந்தனா். இதையடுத்து நான் வட்டிக்கு பணம் வாங்கி விவசாயிகளுக்குக் கொடுத்தேன்.

எனக்கு பணம் தர வேண்டியவரிடம் சென்று கேட்டால், தர முடியாது எனக் கூறுகிறாா். உடல்நிலை மேலும் மோசமான நிலையில் உள்ள என்னிடம் மருத்துவச் செலவுக்குக் கூட பணம் இல்லை. நண்பா்கள் உதவியுடன் ஆக்சிஜன் மூலம் உயிா் பிழைத்து வருகிறேன்.

இது குறித்து செங்கிப்பட்டி காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டுள்ளது. எனவே எனது இறப்புக்கு முன்பு, சம்பந்தப்பட்ட நபா் எனக்கு தர வேண்டிய தொகையைப் பெற்றுத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com