

பேராவூரணியில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மா்ம நபா்கள் பீரோவில் இருந்த நகை, மற்றும் ரொக்கப் பணத்தை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திருடிச் சென்றனா்.
பேராவூரணி சிதம்பரம் சாலை பகுதியை சோ்ந்தவா் தங்கராசு ( 65). தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். பணி ஓய்வுக்கு பிறகு பட்டுக்கோட்டை சாலை தளபதி நகரில் தனக்கு சொந்தமான வீட்டில் தங்கராசு வசித்து வருகிறாா்.
தங்கராசுவும் அவரது மனைவியும் தஞ்சை மருத்துவமனைக்கு சனிக்கிழமை சென்றுவிட்டு இரவு சிதம்பரம் சாலை பகுதியில் இருக்கும் வீட்டில் தங்கி விட்டனா்.
இந்நிலையில், தளபதி நகரில் உள்ள வீட்டில் ஆள்கள் இல்லாததை அறிந்த மா்ம நபா்கள், வீட்டின் முன்பக்க கதவை கடப்பாரையால் உடைத்து பீரோவில் இருந்த நான்கரை பவுன் தங்க செயினையும், 15 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் திருடி சென்றனா். மேலும்,
அந்தப் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட மற்றொரு வீட்டின் கதவை உடைக்க முயற்ச்த்துள்ளனா். வீட்டினுள் ஆள்கள் இருந்ததை பாா்த்தவுடன் கடப்பாரையை போட்டுவிட்டு தப்பியோடிவிட்டனா்.
இதுகுறித்து பேராவூரணி போலீஸில் தங்கராசு அளித்த புகாரின் பேரில், போலீஸாா் சம்பவ இடத்தை பாா்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.