பட்டுக்கோட்டை தொகுதியில் கட்சி வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளிய சுயேட்சை வேட்பாளர்

பட்டுக்கோட்டை தொகுதியில் கட்சி வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி சுயேட்சை வேட்பாளர் 3ஆவது இடத்தைப் பிடித்தார்.
பட்டுக்கோட்டை தொகுதியில் கட்சி வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளிய சுயேட்சை வேட்பாளர்

பட்டுக்கோட்டை தொகுதியில் கட்சி வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி சுயேட்சை வேட்பாளர் 3ஆவது இடத்தைப் பிடித்தார்.

பட்டுக்கோட்டை சட்டப்பேரவை தொகுதியில் திமுக வேட்பாளர் க. அண்ணாதுரை, அதிமுக கூட்டணியில் இடம் பெற்ற தமாக வேட்பாளர் என்.ஆர். ரெங்கராஜன், அமமுக வேட்பாளர் எஸ்.டி.எஸ். செல்வம் மக்கள் நீதி மையம் வேட்பாளர் சதாசிவம், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கீர்த்திகா அன்பு, அனைத்து மக்கள் கட்சி வேட்பாளர் சுந்தர்ராஜ் அண்ணா திராவிடர் கழகம் வேட்பாளர் மெய்யப்பன் சுயேச்சை வேட்பாளர் பாலகிருஷ்ணன் ஆகிய 8 பேர் போட்டியிட்டனர். 

இதில் சுயேட்சை வேட்பாளர் பாலகிருஷ்ணன் பலாப்பழ சின்னத்தில் போட்டியிட்டார். 

இதில் திமுகவைத் அண்ணாதுரை 79065 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இதற்கு அடுத்தபடியாக அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற தமாக வேட்பாளர் என்.ஆர்.ரெங்கராஜன் 53796 வாக்குகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்தார். இதற்கு அடுத்தபடியாக சுயேச்சை வேட்பாளர் வி. பாலகிருஷ்ணன் 23771 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

8 வேட்பாளர் போட்டியிட்ட நிலையில் பிரதான கட்சியான திமுக, அதிமுகவுக்கு அடுத்த நிலையில் சுயேட்சை வேட்பாளர் பாலகிருஷ்ணன் 23771 வாக்குகள் பெற்று கட்சி வேட்பாளர்களை பின்னுக்குத் தள்ளி மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com