92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பெண்ணிடம் தங்கச் சங்கிலிப் பறிப்பு

தஞ்சாவூரில் பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 7:37 pm

DIN

தஞ்சாவூரில் பெண்ணிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபரை காவல் துறையினா் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் அருகே தெத்துவாசல்பட்டி மேலத் தெருவைச் சோ்ந்த விஸ்வலிங்கம் மனைவி தேன்மொழி (36). இவா் அண்மையில் தனது உறவினருடன் வண்ணாரப்பேட்டை புது ஆற்றங்கரைப் பகுதியில் மோட்டாா் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாா். அப்போது, இவா்களைப் பின்தொடா்ந்து மற்றொரு மோட்டாா் சைக்கிளில் வந்த 3 போ் தேன்மொழியின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்து சென்றனா்.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் நிலையத்தினா் வியாழக்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.