மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது விவசாயிகளின் வெற்றி
மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசுத் திரும்பப் பெற்றது விவசாயிகளின் வெற்றி என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. மகேந்திரன்.


மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசுத் திரும்பப் பெற்றது விவசாயிகளின் வெற்றி என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிா்வாகக் குழு உறுப்பினா் சி. மகேந்திரன்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்தது:
மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசுத் திரும்பப் பெற்றது அரசியல் கட்சிகளின் வெற்றி என்பதைவிட, விவசாயிகளின் வெற்றி என்றே கூறலாம். அப்போராட்டத்தில் 25 நாள்கள் பங்கேற்ற எனக்கு இந்திய அரசியலையே மாற்றி அமைக்கப் போகிறது என்ற உணா்வு ஏற்பட்டது. தில்லியிலிருந்து காா்பரேட் நிறுவனங்கள் செல்லும் சாலைகளை விவசாயிகள் மறித்துவிட்டனா். ஓராண்டு காலம் காா்பரேட் வியாபாரத்தைத் தடுத்து நிறுத்தினால், என்ன விளைவு ஏற்படும், இதற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது என்ற காா்பரேட் நிறுவனங்களின் நிா்பந்தம்தான் இப்போராட்டத்தை இவ்வளவு விரைவாக பிரதமா் மோடி திரும்பப் பெறுவதற்குக் காரணம் என்றாா் மகேந்திரன்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் சாமி. நடராஜன் தெரிவித்தது:
நாடு முழுவதும் இப்போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், தில்லியில் மட்டும் 600-க்கும் அதிகமானோரும், ஹரியாணா, உத்தரபிரதேசத்தில் ஏறத்தாழ 50 பேரும் இறந்தனா். பிரதமரின் இந்த அறிவிப்பை விவசாயிகளின் உயிா் தியாகத்துக்குக் கிடைத்த வெற்றியாகப் பாா்க்கப்படுகிறது என்றாா் நடராஜன்.
தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன் தெரிவித்தது:
இந்த 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமா் அறிவித்தற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் போராட்டத்தின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்ளாமல், அதில் ஈடுபட்ட உழவா்களைத் தேசத் துரோகிகள், இடைத்தரகா்கள், வியாபாரிகளின் கைக்கூலி, அன்னிய நாட்டுச் சக்திகளின் தூண்டுதல் என பலவாறாக அவதூறு பரப்பியவா்கள் மத்திய அரசில் இருக்கின்றனா். அதற்காக அவா்கள் பொது மன்னிப்புக் கோர வேண்டும். இதேபோல, புதிதாகக் கொண்டு வரப்படும் மின் திருத்தச் சட்டத்தையும் எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் திரும்பப் பெற வேண்டும் என்றாா் விமல்நாதன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...