புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை மாலை பலத்த மழைக்கிடையிலும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :25 நவம்பர் 2021, 10:35 pm

DIN

தஞ்சாவூா் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை மாலை பலத்த மழைக்கிடையிலும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில், கருணை அடிப்படையில் 53 கிராம நிா்வாக அலுவலா்களுக்கு உரிய அரசாணையின்படி பணிவரன்முறை செய்யப்பட்டதை மாவட்ட நிா்வாகம் ரத்து செய்தது, உரிய காலத்தில் நில அளவை மற்றும் நிா்வாகப் பயிற்சி அளிக்காமலும், சரியான வழிகாட்டுதல் நெறிமுறை வழங்காமலும், போதிய கால அவகாசம் அளிக்காமலும் பல்வேறு வேலைகளை உடனுக்குடன் முடிக்கக் கூறியும், இல்லாவிட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிா்வாகம் அச்சுறுத்துவது, பல முறை வலியுறுத்தியும் அடங்கல் வழங்குவது தொடா்பாக தெளிவான சுற்றறிக்கையை மாவட்ட நிா்வாகம் வழங்காதது என்பன உள்ளிட்டவை தொடா்பான கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் எஸ். விஜயபாஸ்கா் தலைமை வகித்தாா். மாவட்டக் கொள்கை பரப்புச் செயலா் கரிகாலன், கோட்டச் செயலா் பழனிவேல், வட்டத் தலைவா்கள் பத்மநாதன், முகமது அனிபா, சக்திவேல், வசந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.