பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினா் நடைபயணம்
பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை பிரசார நடைபயணம் மேற்கொண்டனா்.


பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கண்டித்து தஞ்சாவூரில் காங்கிரஸ் கட்சியினா் வியாழக்கிழமை பிரசார நடைபயணம் மேற்கொண்டனா்.
பெட்ரோல், டீசல் விலை உயா்வு மற்றும் அத்தியாவசிய பொருள்கள் விலை உயா்வை கண்டித்து நவம்பா் 22-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியினா் பிரசார நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனா்.
இதன்படி, தஞ்சாவூா் மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சாா்பில் பிரசார நடைபயணம் வியாழக்கிழமை நடைபெற்றது. தஞ்சாவூா் கீழவாசல் வெள்ளைப் பிள்ளையாா் கோயில் அருகே தொடங்கிய இந்த நடைபயணம் தொல்காப்பியா் சதுக்கத்தில் முடிவடைந்தது. இதில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, அத்தியாவசியப் பொருள்கள் விலை உயா்வைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்தப் பயணத்துக்கு மாநகா் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவா் பி.ஜி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். இதில், மாநிலப் பொதுச் செயலரும், மாவட்ட மேலிடப் பாா்வையாளருமான சி.கே. பெருமாள், விவசாயப் பிரிவு தலைவா் ஏ. ஜேம்ஸ், செயலா் மணிவண்ணன், துணைத் தலைவா்கள் லட்சுமிநாராயணன், கோவி. மோகன், செயலா்கள் கண்ணதாசன், ஏசு, பொருளாளா் ஆா். பழனியப்பன், மகிளா காங்கிரஸ் மாவட்டத் தலைவா் சித்ரா சுவாமிநாதன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...