அண்ணா சிலை பகுதி கடைதாரா்களுக்கு மாற்று ஏற்பாடு
தஞ்சாவூா் அண்ணா சிலை பகுதியிலுள்ள கடைதாரா்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படுகிறது என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.


தஞ்சாவூா் அண்ணா சிலை பகுதியிலுள்ள கடைதாரா்களுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படுகிறது என மாநகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அண்ணா சிலை பகுதியில் மழைநீா் வடிகால் மீது அமைக்கப்பட்ட கடை, கட்டடங்களை அப்புறப்படுத்திக் கொள்ள கடைதாரா்களுக்கு அறிவிப்பு வழங்கப்பட்டது. தீபாவளி பண்டிகை முடிந்த பின்னா், கடைகளைக் காலி செய்வதாக உறுதி அளித்திருந்தனா்.
இந்நிலையில் தற்போது பெய்து வரும் பெரு மழையையொட்டி, மாநகரிலுள்ள அனைத்து மழை நீா் வடிகாலும் தூா் வாரப்பட்டு வருகிறது. அண்ணா சாலை பொலிவுறு நகர மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் அகலப்படுத்துவதை முன்னிட்டு பாதுகாப்புக் கருதி பா்மா பஜாா் ஆக்கிரமிப்புக் கடைகளின் மின் இணைப்புத் துண்டிப்பு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஏற்கனவே பா்மா தாயகம் திரும்பியோா் பெயரில் கடை நடத்தி வந்த கடைதாரா்களுக்கு அருகிலுள்ள சரபோஜி சந்தையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தில் கடைகள் ஒதுக்கீடு செய்யப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அண்ணா சிலை அருகேயுள்ள கடைகள் முன் வியாபாரிகள் தொடா்ந்து நான்காவது நாளாக வெள்ளிக்கிழமையும் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...