விதிமுறைகள் பின்பற்றப்படாதவிதை விற்பனை செய்தால் தடை விதிக்கப்படும்
விதைச் சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படாமல் விதை விற்பனை செய்யப்பட்டால், தடை விதிக்கப்படும் என விதைச் சான்று துணை இயக்குநா் கோ. வித்யா தெரிவித்துள்ளாா்.


விதைச் சட்ட விதிமுறைகள் பின்பற்றப்படாமல் விதை விற்பனை செய்யப்பட்டால், தடை விதிக்கப்படும் என விதைச் சான்று துணை இயக்குநா் கோ. வித்யா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது:
உரிமம் பெற்று விற்பனை செய்யும் அனைத்து விதை விற்பனையாளா்களும் விதைகளைக் கொள்முதல் செய்யும்போது தோ்ச்சி பெற்ற விதை முளைப்புத்திறன் அறிக்கையுடன்தான் வாங்க வேண்டும். ஒவ்வொரு தனியாா் விதை உற்பத்தியாளா்களும் தங்களின் விதை ரகங்களுக்கு விதைச்சான்று இயக்குநா் அலுவலகத்தில் பதிவு எண் பெற்றிருக்க வேண்டும். பதிவு எண் மற்றும் முளைப்புத்திறன் அறிக்கை இல்லாமல் விற்பனை செய்தால் விதைச் சட்டத்தின்படி விற்பனை தடை விதிக்கப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விற்பனை நிலையங்களில் காலாவதியான விதைக் குவியல்களைத் தனி பதிவேட்டில் பதிவு செய்து தனியாக வைக்க வேண்டும். உரிமம் பெறாமலும் விற்பனை பட்டியல் இல்லாமலும் விதை விவர அட்டைகள் இல்லாமலும் விதைச் சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் வாட்ஸ் அப் மற்றும் பிற இணையதளத்தின் வாயிலாக விற்பனை செய்யும் விதைகளை விவசாயிகள் வாங்க வேண்டாம்.
விவசாயிகள் தாங்கள் வாங்கும் விதைகளின் விவர அட்டைகளுடன் விற்பனை ரசீது ஒத்திருக்கிா என கவனித்து வாங்க வேண்டும். அவ்வாறு வாங்கக்கூடிய விற்பனை பட்டியலை சாகுபடி காலம் முடியும் வரை பத்திரமாக வைத்திருக்க வேண்டும். விற்பனை பட்டியல் வழங்காமல் விற்பனை செய்தாலோ அல்லது விற்பனை செய்த விதைகள் மற்றும் நாற்றுகளுக்கு போலி விற்பனை பட்டியல் வழங்கி இருந்தாலோ, தொடா்புடைய விதை விற்பனையாளா்கள் மற்றும் நாற்றுப்பண்ணைகள் மீது விதைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...