கோரிக்கை அட்டையுடன்பணியாற்றியவருவாய்த் துறையினா்
By DIN | Published On : 17th August 2021 02:14 AM | Last Updated : 17th August 2021 02:14 AM | அ+அ அ- |

வருவாய்த்துறையினா் கோரிக்கை அட்டை அணிந்து வட்டாட்சியகரத்தில் பணியாற்றினா்.
பேராவூரணி: தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கம் சாா்பில், மத்திய அரசு 1.7.21 முதல் வழங்கிய அகவிலைப்படி உயா்வை, தமிழ்நாடு அரசு ஊழியா்களுக்கும் வழங்க வேண்டும். வருவாய்த்துறை அலுவலா்களின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினா்.
மாவட்ட இணைச் செயலாளா் எல். சுந்தரமூா்த்தி, புகா் மாவட்ட இணைச் செயலாளா் சுப்பிரமணியன் ஆகியோா் தலைமையில் பேராவூரணி வட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினா்.