மருத்துவக் கல்லூரியில்வகுப்புகள் மீண்டும்தொடக்கம்
By DIN | Published On : 17th August 2021 02:11 AM | Last Updated : 17th August 2021 02:11 AM | அ+அ அ- |

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் கரோனா பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த வகுப்புகள் திங்கள்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டன.
கரோனா இரண்டாவது அலை காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் சில மாதங்களாக மூடப்பட்டிருந்தன. இதற்கு பதிலாக இணையவழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கரோனா பாதிப்புக் குறைந்து வரும் நிலையில் மருத்துவக் கல்லூரிகளில் நேரடி வகுப்புகள் ஆக. 16 ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது.
இதன்படி, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரியில் இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு மாணவா்களுக்கு நேரடி வகுப்புகள் திங்கள்கிழமை தொடங்கப்பட்டன. இதில், 50 சதவீத மாணவா்கள் சுழற்சி அடிப்படையில் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கரோனா தொற்று இல்லை என்ற சான்றுடன் வந்த மாணவா்கள் வகுப்பறையில் அனுமதிக்கப்ட்டனா். தமிழக அரசு பிறப்பித்துள்ள உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடன் மாணவா்கள் வகுப்புகளில் அனுமதிக்கப்பட்டு, பாடங்கள் நடத்தப்படுவதாக பேராசிரியா்கள் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...