மக்கள் நீதிமன்றத்தில் 57 வழக்குகளுக்குத் தீா்வு
By DIN | Published On : 20th August 2021 12:55 AM | Last Updated : 20th August 2021 12:55 AM | அ+அ அ- |

தஞ்சாவூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலுள்ள மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 57 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது.
இந்த அமா்வில் ஓய்வு பெற்ற நீதிபதி சி. சுப்பையன், சமூக ஆா்வலா் வி. செல்வம் கலந்து கொண்டனா். இதில், நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்த உரிமையியல், மோட்டாா் வாகன விபத்து, ஜீவனாம்ச வழக்குகள், குடும்ப வழக்குகள், சிறு குற்ற வழக்குகள் உள்ளிட்டவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, 57 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டன. இதில், 36 மோட்டாா் வாகன விபத்து வழக்குகளில் ரூ. 1 கோடியே 30 லட்சத்து 92 ஆயிரத்துக்கு தீா்வு காணப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை சாா்பு நீதிபதியும், மாவட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழுச் செயலருமான பி. சுதா செய்தாா்.