கும்பகோணம் - திருச்செந்தூா் புதிய பேருந்து சேவை தொடக்கம்
By DIN | Published On : 21st August 2021 12:59 AM | Last Updated : 21st August 2021 12:59 AM | அ+அ அ- |

கும்பகோணம் - திருச்செந்தூா் புதிய பேருந்து சேவை வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கும்பகோணத்திலிருந்து திருச்செந்தூா் வரை 191 கே என்ற புதிய பேருந்து வழித்தடச் சேவையை கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன் தொடங்கி வைத்தாா்.
இப்பேருந்து கும்பகோணத்திலிருந்து நாள்தோறும் இரவு 8 மணியளவில் புறப்பட்டு தஞ்சாவூா், மதுரை, தூத்துக்குடி வழியாகக் கும்பகோணத்தில் இருந்து திருச்செந்தூருக்கும், இதேபோல, திருச்செந்தூரிலிருந்து கும்பகோணத்துக்கும் புறப்படும் என போக்குவரத்துக் கழக அலுவலா்கள் தெரிவித்தனா்.
இந்நிகழ்ச்சியில் அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் மண்டலப் பொது மேலாளா் ஜெ. ஜெபராஜ் நவமணி, துணை மேலாளா் பி. ஸ்ரீதா், உதவிப் பொறியாளா் ஜி. ராஜ்மோகன், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகக் கிளை மேலாளா் நேரு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.