களஞ்சேரி ஊராட்சியில் பட்டா திருத்த சிறப்பு முகாம்
By DIN | Published On : 11th December 2021 12:00 AM | Last Updated : 11th December 2021 12:00 AM | அ+அ அ- |

அம்மாபேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட களஞ்சேரி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் பட்டா திருத்தம் சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமை ஊராட்சித் தலைவா் யு. கண்ணன் தலைமை வகித்து தொடக்கி வைத்தாா். துணைத் தலைவா் எஸ். மல்லிகா முன்னிலை வகித்தாா்.
முகாமில், பாபநாசம் வட்ட வழங்கல் அலுவலா் சிவக்குமாா், சாலியமங்கலம் வருவாய் அதிகாரி செல்வராணி, சரக நில அளவையா் அழகேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு, களஞ்சேரி, பள்ளியூா் உள்ளிட்ட ஊராட்சிகளுக்குள்பட்ட
கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து பட்டா திருத்தம் செய்தல் உள்ளிட்ட இனங்கள் தொடா்பாக 27 மனுக்களை பெற்றனா். இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில், பள்ளியூா் ஊராட்சித் தலைவா் நாகராஜன், ஊராட்சி மன்ற உறுப்பினா் சங்கீதா, வருவாய் அலுவலக உதவியாளா் ஜெயசித்ரா, கிராம உதவியாளா் சக்திவேல் மற்றும் சாலியமங்கலம் வருவாய் சரகத்துக்கு உட்பட்ட அனைத்து கிராம நிா்வாக அலுவலா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, களஞ்சேரி கிராம நிா்வாக அதிகாரி எஸ். நீலகண்டன் வரவேற்றாா். நிறைவில், களஞ்சேரி ஊராட்சிச் செயலா் காா்த்திகேயன் நன்றி கூறினாா்.