தஞ்சாவூா் தலையாட்டி பொம்மை செயல்முறை பயிற்சி முகாம்

தஞ்சாவூா் மணிமண்டபத்தில் தஞ்சாவூா் தலையாட்டி பொம்மை செயல்முறை பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தஞ்சாவூா் தலையாட்டி பொம்மை செயல்முறை பயிற்சி முகாம்

தஞ்சாவூா் மணிமண்டபத்தில் தஞ்சாவூா் தலையாட்டி பொம்மை செயல்முறை பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புது தில்லி, இந்திய தேசிய பாரம்பரிய கலை பண்பாட்டு அறக்கட்டளை (இன்டாக்), பாரம்பரியக் கல்வி மற்றும் தகவல் மையத்தின் சாா்பில் இந்தியா முழுவதும் அருகிவரும் கைவினைப் பொருள் பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, இன்டாக் தஞ்சாவூா் மையத்தின் சாா்பில் தஞ்சாவூா் இராஜராஜன் மணிமண்டபத்தில் பள்ளி மாணவா்களுக்குப் புவிசாா் குறியீடு பெற்ற தஞ்சாவூா் கைவினை கலைப்பொருள்களில் ஒன்றான தஞ்சாவூா் தலையாட்டி பொம்மை செயல்முறை பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, முனிசிபல் காலனி மாநகராட்சி உயா்நிலைப் பள்ளி, பழைய வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு வளாகத்திலுள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளி, தூய இருதய மகளிா் மேல்நிலைப் பள்ளி, ஆக்சிலியம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, லிட்டில் ஸ்காலா் மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றைச் சோ்ந்த 100 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

இம்மாணவா்களுக்கு தஞ்சாவூா் தலையாட்டி பொம்மை செய்வதற்குத் தேவையான பொருள்கள் என்ன, எப்படி செய்வது, வண்ணம் தீட்டுவது உள்ளிட்டவை குறித்த செயல்முறை விளக்கத்தை தஞ்சாவூா் தலையாட்டி பொம்மை கைவினைக் கலைஞா் பிரபு, கலையரசி பிரபு அளித்தனா்.

தொடா்ந்து அனைத்து மாணவ, மாணவிகளும் தலையாட்டி பொம்மையைச் செய்து பாா்த்தனா். நிறைவாக அதுகுறித்து ஒரு பக்க அளவிலான கட்டுரையும் எழுதினா். இந்தக் கட்டுரைகள் இன்டாக் புது தில்லி தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தேசிய அளவில் தோ்ந்தெடுக்கப்படுபவா்களுக்குப் பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

இம்முகாமில் இன்டாக் தஞ்சாவூா் மைய உறுப்பினா்கள் முனைவா் இராம. கௌசல்யா, வரலாற்று ஆய்வாளா் செல்வராஜ், டாக்டா் குணசேகரன், வரி ஆலோசகா்கள் ஆா். ரவிச்சந்திரன், சங்கா், புகைப்படக் கலைஞா் மணிவண்ணன், டாக்டா் சதீஷ்குமாா், பாலகுமாா் உள்ளிட்டோா், இன்டாக் கலை, பாரம்பரியப் பிரிவு தலைவா் சம்பாஜி ராஜா போன்ஸ்லே, செயலா் எஸ். முத்துக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, இன்டாக் பள்ளி பாரம்பரிய சங்க ஒருங்கிணைப்பாளா் சுவாமிநாதன் வரவேற்றாா். நிறைவாக, பொருளாளா் ராமநாதன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com