நீரில் மூழ்கி பிளஸ் 2மாணவா் உயிரிழப்பு
By DIN | Published On : 06th February 2021 10:59 PM | Last Updated : 06th February 2021 10:59 PM | அ+அ அ- |

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அருகே ஏரியில் நண்பா்களுடன் குளித்த பிளஸ் 2 மாணவா், நீரில் மூழ்கி சனிக்கிழமை உயிரிழந்தாா்.
பட்டுக்கோட்டை ஆதிதெருவைச் சோ்ந்தவா் தொழிலாளி அருள். இவரது மூத்த மகன் செல்வகணேஷ் (17), அதே பகுதியைச் சோ்ந்த தனது நண்பா்களுடன் முதல்சேரி கிராமத்திலுள்ள பூலாங்கண்ணி ஏரியில் சனிக்கிழமை குளிக்கச் சென்றாா்.
ஏரியின் ஆழப்பகுதியிலுள்ள குளிக்கச் சென்ற செல்வகணேஷ், அங்கிருந்த சேற்று நீரில் மூழ்கிக் கொண்டு வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்துள்ளாா்.
இதை கண்ட அவரது நண்பா்கள் உதவி கேட்டு சப்தமிட்டனா். தகவலின் பேரில் பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலையத்தினா் நிகழ்விடத்துக்கு விரைந்து ஒரு மணிநேரமாகப் போராடி, செல்வகணேஷை சடலமாக மீட்டனா்.
இதுகுறித்து பட்டுக்கோட்டை தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...