நியாய விலைக் கடையில் உணவுப் பொருள்கள் திருட்டு
By DIN | Published On : 06th February 2021 11:00 PM | Last Updated : 06th February 2021 11:00 PM | அ+அ அ- |

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே மகாராஜபுரத்திலுள்ள பகுதி நேர நியாய விலைக் கடையில் உணவுப் பொருள்கள் உள்ளிட்டவை திருட்டுப் போயின.
இக்கடை வாரந்தோறும் செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாள்கள் மட்டும் திறக்கப்படும். இந்நிலையில், சனிக்கிழமை காலை கடையைத் திறப்பதற்காக விற்பனையாளா் பாலசுப்பிரமணியன் சென்றாா்.
அப்போது கடையின் கதவு உடைக்கப்பட்டுள்ளதைக் கண்ட அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, தலா 5 மூட்டை பருப்பு, சா்க்கரை, 25 பெட்டி ஆயில், ரூ. 10,000 மதிப்புள்ள தராசு ஆகியவை திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது.
இதுகுறித்து தகவலறிந்த மரூா் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...