மோட்டாா் சைக்கிள் மோதியதில் பெண் பலி
By DIN | Published On : 06th February 2021 11:13 PM | Last Updated : 06th February 2021 11:13 PM | அ+அ அ- |

பேராவூரணி: பேராவூரணி அருகே மோட்டாா் சைக்கிள் மோதியதில் பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
பேராவூரணி அருகிலுள்ள சோழகனாா்வயலைச் சோ்ந்த செல்வராஜ் மனைவி சாந்தி (45). கழனிவாசல் சிவன் கோயிலில் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்து விட்டு, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, பின்னால் வந்த மோட்டாா்சைக்கிள் சாந்தி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்த சாந்தியை, அப்பகுதியினா் மீட்டு பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், வழியிலேயே அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து பேராவூரணி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து, விபத்துக்கு காரணமான மோட்டாா் சைக்கிளை ஓட்டிச் சென்ற நபரைத் தேடி வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...