குடந்தையில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம்எல்ஏ
By DIN | Published On : 20th February 2021 11:46 PM | Last Updated : 20th February 2021 11:46 PM | அ+அ அ- |

நலத்திட்ட உதவி வழங்கிய எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன்.
கும்பகோணம்: கும்பகோணத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பில் தனது சொந்த செலவில் எம்எல்ஏ சாக்கோட்டை க. அன்பழகன் நலத்திட்ட உதவிகளை சனிக்கிழமை வழங்கினாா்.
திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி தனது அலுவலக வளாகத்தில், அத்தொகுதியில் வசித்து வரும் 125 பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்கள், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மூன்று சக்கர சைக்கிள்கள், 2 காது கேளாதவா்களுக்கு காது கேட்கும் கருவிகள், 4 சலவைத் தொழிலாளா்களுக்கு இலவச சலவை பெட்டிகள் என மொத்தம் ரூ. 10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ வழங்கினாா்.
தொடா்ந்து 2016 - 2021 ஆம் ஆண்டுகளில் கும்பகோணம் சட்டப்பேரவைத் தொகுதியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள், சட்டப்பேரவையில் எழுப்பிய கோரிக்கைகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில் மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினா் செ. ராமலிங்கம், தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் சு. கல்யாணசுந்தரம், திமுக நகரப் பொறுப்பாளா் சுப. தமிழழகன், சிட்டி யூனியன் பவுண்டேசன் தலைவா் எஸ். பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.