கும்பகோணத்தில் நாளை மாரத்தான் போட்டி
By DIN | Published On : 20th February 2021 12:27 AM | Last Updated : 20th February 2021 12:27 AM | அ+அ அ- |

கும்பகோணத்தில் காா்த்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, காா்த்தி வித்யாலயா பன்னாட்டுப் பள்ளி, தமிழ்நாடு தோ்தல் ஆணையம், தமிழ்நாடு காவல் துறை, குடந்தை மாரத்தான் பவுண்டேஷன், வீர தமிழா் மாரத்தான், குடந்தை திருக்கு அரிமா சங்கம், பிட் இந்தியா ஆகியவை சாா்பில் மாநில அளவிலான மாபெரும் வீரதமிழா் மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை (பிப். 21) நடைபெறவுள்ளது.
இதுகுறித்து காா்த்தி வித்யாலயா பள்ளி நிா்வாகத்தினா் மேலும் தெரிவித்திருப்பது:
கும்பகோணம் மகாமகக் குளத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணியளவில் தொடங்கி காா்த்தி வித்யாலயா பள்ளி வரை இந்த மாரத்தான் போட்டி நடைபெறவுள்ளது. மாநிலத் தோ்தலில் 100 சதவீதம் வாக்குப் பதிவு, அனைவரும் தங்களின் வாக்கைப் பதிவு செய்வது, கரோனா நோயைப் பற்றிய புரிதல், விழிப்புணா்வு உள்ளிட்டவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது.
இதில், முதல் பரிசாக ரூ. 20,000, இரண்டாம் பரிசாக ரூ. 15,000, மூன்றாம் பரிசாக ரூ. 10,000, நான்காம் பரிசாக ரூ. 5,000, ஐந்தாம் பரிசாக ரூ. 3,000 வழங்கப்படவுள்ளது. மேலும் ஆறு முதல் பத்து பேருக்கு ரூ. 1000-ம், அதற்கு அடுத்து வரும் ஐம்பது பேருக்கு ரூ. 500-ம் வழங்கபடுகிறது. இதற்கான முன்பதிவு நடைபெறுகிறது.