பேராவூரணி கோட்டத்தில் ரூ.85 கோடியில் சாலைப் பணிகள்
By DIN | Published On : 27th February 2021 11:58 PM | Last Updated : 27th February 2021 11:58 PM | அ+அ அ- |

பேராவூரணி கோட்ட நெடுஞ்சாலைத்துறை மூலம் ரூ 85 கோடியில் பரப்பளவு அடிப்படையிலான ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு, வலுப்படுத்துதல், மற்றும் பராமரித்தல் திட்டத்தின் கீழ் விரிவாக்கப் பணிகள் அண்மையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூா்-பட்டுக்கோட்டை சாலை, அறந்தாங்கி சாலை, திருச்சிற்றம்பலம் - மாவடுகுறிச்சி சாலை, ஆண்டிக்காடு சாலை, தஞ்சாவூா் - கறம்பக்குடி - சீதாம்பாள்புரம் சாலை, காலகம் - ஆவுடையாா்கோவில் சாலை உள்ளிட்ட சாலைகள் அகலப்படுத்துதல், மேம்பாடு செய்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
2021-2022 நிதியாண்டில் 55 கிமீ மாநில, மாவட்ட, முக்கிய சாலைகள் மேம்பாடு செய்யப்படவுள்ளன. தொடா்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு பேராவூரணி கோட்டப்பகுதியில் சாலை மேம்பாட்டுப் பணிகள் நடைபெறும் என உதவிக் கோட்டப்பொறியாளா் ஆ, கணேசன், உதவிப் பொறியாளா் ஜெயக்குமாா் தெரிவித்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...